முல்லைத்தீவு கடலில் ஒளிபாய்ச்சி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது
முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கடற்தொழிலாளர் தெரிவித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
நேற்று(15) இரவு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு கடலில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஒன்றான கடலுக்குள் ஒளிபாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் கடற்பரப்பில் மூன்று படகுகளும், மாத்தளன் கடற்பரப்பில் ஒரு படகும், வலைஞர்மடம் கடற்பகுதியில் இரண்டு படகுகளும் என மொத்தமாக 6 படகுகளுடன் 8 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட
நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில்
நீரியல்வள திணைக்களம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri