முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றையதினம்(3.6.2026) நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் .முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனின் ஒழுங்கமைப்பில் கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடல்
கலாசார மண்டபம் அமைத்தல், கேப்பாப்புலவு காணி விடுவிப்பு, தற்போது நடைபெற்றுவரும் வேலைகளின் முன்னேற்றங்கள், பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை, வைத்தியசாலை மற்றும் திணைக்கள ஆளணி பற்றாக்குறை, வைத்தியசாலை ஆளனி பற்றாக்குறை, வீதி அபிவிருத்திகள், முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடம் மற்றும் அதன் கடைத்தொகுதிகள், சட்டவிதோர தொழில்கள், கிராமிய சித்த வைத்தியசாலைகளின் பற்றாக்குறை, போக்குவரத்து பிரச்சனை, காட்டு யானைகளால் கிராம மக்களின் சொத்துக்கள் மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஏனைய திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri