தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் இன்று(03.06.2026) தென்மராட்சி பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி ஏற்பாட்டில், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
இதன்போது, தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள 60 கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக சுகாதாரம், வீதி, போக்குவரத்து, விவசாயம், சுண்ணக்கல் அகழ்வு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில், சாவகச்சேரி நகரசபை தவிசாளர் ஸ்ரீபிரகாஷ், சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் குகதாசன், சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபைகளின் உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

