முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலை இடைவிலகல் மற்றும் மாணவர்களின் பிரச்சினைகள், கடந்த கூட்ட குறிப்பின் முன்னேற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிறப்பு சான்றிதழ் இல்லாத பிள்ளைகளுக்கான பிறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொடுத்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், சிறுவர் இல்லங்கள், அறநெறி வகுப்புகள், சுகாதாரம், போசனை, போதைபொருள், சிறுவர்பாதுகாப்பு தொடர்பான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள்,வலயகல்வி பணிமனை அதிகாரிகள், பொலிஸார், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam