நீராவிப்பிட்டியில் வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை!மருத்துவ அறிக்கையில் வெளியான தகவல் (Video)
முல்லைத்தீவு - முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறு வியாபார வணிக நிலையம் நடத்தி வந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தினை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் அறிக்கையின் பின்னர் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முள்ளியவளை, நீராவிப்பிட்டி பகுதியில் வணிக நிலையம் நடத்தி வந்த வணிகர் ஒருவர் 22.12.22 அன்று உயிரிழந்த நிலையில் வணிக நிலையத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
68 அகவையுடை அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் போது அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் விசாரணைகளை முடக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு தடயங்கள்
திரட்டப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.