முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் (PHOTOS)
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் (Jeevan Thiagarajah) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் நேற்று பி.ப 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டாம் கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதை தொடர்ந்து பெயர்ப்பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வடமாகாண பிரதம செயலாளர், நகர அபிவிருத்தி சபை பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மதத் தலைவர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் பிரத்யேக செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், நகர அபிவிருத்தி சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri