வீதி விபத்தில் குடும்ப பெண் பலி! பொலிஸார் விசாரணை
முல்லைத்தீவு - புது குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமாடு, புலியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வீதியை கடக்க முற்பட்டபோது அதிக வேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்து வந்த மோட்டார் சைக்கிள் பெண்ணின் மீது மோதியுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது படுகாயங்களுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் விசுவமடு, புளியடி பகுதியை சேர்ந்த 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான N. சுகந்தினி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக புதுகுடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam