முல்லைத்தீவு ஊடகவியலாளர் வழக்கில் கடற்படை புலனாய்வாளருக்கு பிடியாணை

Tamils Mullaitivu Northern Province of Sri Lanka
By Shan Sep 21, 2023 07:41 PM GMT
Report

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது தொடுக்கப்பட்ட வழக்கின், வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு  நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு 20.04.2019 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு பல வருடங்களாக இது தொடர்பான வழக்கு இடம்பெற்று வரும் நிலையில், கடந்த 04.05.2023 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவில் வணிகம் செய்தவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது

முல்லைத்தீவில் வணிகம் செய்தவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது

நீதிமன்ற பிடியாணை

இந்நிலையில் வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகளுக்கு வருவதில்லை என தெரிவிக்கப்படட நிலையில் குறித்த கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் 2023-09-21 இன்றைய திகதிக்கு தவணையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (2023-09-21) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.எஸ் தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் வழக்கில் கடற்படை புலனாய்வாளருக்கு பிடியாணை | Mullai Sanmugam Thavaseelan Court Order

இந்நிலையில் இன்றும் வழக்கு தொடுனரான குறித்த கடற்படை புலனாய்வாளர் வருகைதரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக பொலிஸார் நீதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.

அதன்படி குறித்த கடற்படை புலனாய்வாளர் மற்றும் அவரது சாட்சி ஆகிய இருவருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ரணிலுக்கு எதிராக இன்று இரவு போராட்டம்

அமெரிக்காவில் ரணிலுக்கு எதிராக இன்று இரவு போராட்டம்

கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார்.

இதன் போது செல்வபுரம் பேரூந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் வழக்கில் கடற்படை புலனாய்வாளருக்கு பிடியாணை | Mullai Sanmugam Thavaseelan Court Order

ஆர்ப்பாட்டக்காரர்களை அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என வினவியபோது, அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு பொலிஸாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமாகியுள்ளது.

20க்கும் மேற்பட்டோரை நாடு கடத்துங்கள்: இந்திய தரப்புக்களால் கனடாவிடம் கோரிக்கை

20க்கும் மேற்பட்டோரை நாடு கடத்துங்கள்: இந்திய தரப்புக்களால் கனடாவிடம் கோரிக்கை

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிப்பட்ட நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என வினவியபோது, அவர் தங்களுடைய நபர் என கடற்படையினர் தெரிவித்ததுடன், அவரை குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

முத்தையா முரளிதரனுக்காக இலங்கையில் மாற்றப்படும் சட்டம்

முத்தையா முரளிதரனுக்காக இலங்கையில் மாற்றப்படும் சட்டம்

கனடாவின் குடிமக்களுக்கு விசா வழங்குவதை இடைநிறுத்தியுள்ள இந்தியா

கனடாவின் குடிமக்களுக்கு விசா வழங்குவதை இடைநிறுத்தியுள்ள இந்தியா

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US