முத்தையா முரளிதரனுக்காக இலங்கையில் மாற்றப்படும் சட்டம்
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்காக நாட்டில் சட்டமொன்று திருத்தப்பட்டுள்ளது.
முரளிதரனின் வாழ்க்கை சரிதத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 800 என்னும் திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன சட்டத்தின் படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்களை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.
சட்ட திருத்தம்
எனினும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஅமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படத் தயாரிப்பிற்கு உள்நாட்டில் பல்வேறு பங்களிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சட்டம் ஓர் திரைப்படத்திற்கு மட்டும் மாற்றப்படுவதாகவும் பின்னர் மீண்டும் அந்த தடை நடைமுறையில் இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
