அமெரிக்காவில் ரணிலுக்கு எதிராக இன்று இரவு போராட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் எதிர்ப்புப் போராட்டத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கில் நடந்துவரும் நிலையில் இன்று(21.09.2023) இரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரை நிகழ்த்தவுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் காரணம் என வலியுறுத்தியே வட அமெரிக்க தமிழ் மக்களை அணி திரளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தமிழீழ அரசாங்கம் கருத்து தெரிவிக்கையில்,
“ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியூயோர்க் வந்தடைந்துள்ளார்.
உரையாற்றுவதை வேடிக்கை பார்க்க முடியாது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சொந்தங்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் எனக் கூறிய ரணிலே இன்று இனப்படுகொலையாளிகளான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, இராணுவத் தளபதிகள் மற்றும் புலனாய்வாளார்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பதற்காகப் பதவியில் அமர்ந்து செயற்படுகின்றார்.
தற்போதைய ஜனாதிபதி ரணிலின் ஆட்சியிலேயே வடகிழக்கில் பெளத்த மயமாக்கலும், சிங்களக் குடியேற்றமும் தீவிரமாக இடம்பெறுகின்றன.
தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தியை அடித்து நொருக்குமாறும், தமிழர்களை அடித்துக் கொல்லுமாறும் உத்தரவு பிறப்பித்தவர் இன்று அமெரிக்காவில் உரையாற்றுவதை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது.
எம் மக்களின் உரிமைகளை பறித்தெடுத்த ரணிலுக்கு எதிராக ஐ.நா. முன்றில்
அணிதிரள்வோம்” - என குறிப்பிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
