சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரீ செயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வுானது நேற்று(08.05.2024)முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் சிறப்புற தலைமையில் நடைபெற்றுள்ளது.
நினைவு பரிசில்கள்
இதன்போது கடந்த ஆண்டு தனது 72 ஆவது அகவையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதங்கங்களையும் வெங்கல பதக்கத்தினையும் வென்று விளையாட்டில் சாதனை படைத்து நாட்டிற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த இலங்கையில் சாதனை மங்கையாக காணப்படும் இவருக்கு முள்ளியவளை மக்கள் சார்பாக முல்லையின் வீரமங்கை என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து கவிதைகள்,பேச்சுக்கள் என்பன இடம்பெற்று நினைவு பரிசில்களும் வாழ்த்து மடல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் உரை நிழக்த்திய முல்லையின் வீரமங்கையான அகிலத்திருநாயகி தான் இன்றும் 246 பதக்கங்களுக்கு மேல் விளையாட்டில் பெற்றுள்ளதாகவும், கடந்த வாரமும் கண்டியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியிலும் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ச.சஞ்சிவினி,சட்டத்தரணி கு.கம்சன், முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய தலைவரும் சட்டத்தரணியுமான க.பரஞ்சோதி,கல்யாண வேலவர் ஆலய நிர்வாக தலைவரும் முன்னாள் அதிபருமான கமலகாந்தன்,
கிராமசேவையாளர்களான ரி.ஜெயபாபு,க.விக்னேஸ்வரன்,கு.சிந்துஜன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்,அகிலஇலங்கை சமாதான நீதவான்களான க.தியாராஜா,க.அருளானந்தம்,ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி ஜயம்பிள்ளை,சமூகசேவையாளரும் தொழிலதிபர் ஆனந்தரசா உள்ளிட்ட கமக்கார அமைப்பினர்,கிராம சக்த்தி அமைப்பினர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர், சி.க.கூ கூட்டுறவு சங்கத்தினர்,மாதர்சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |