எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய நெருக்கடி குறித்து எச்சரிக்கை
எதிர்வரும் நாட்களில் நாட்டில் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்க கூடும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் பானின் விலை உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் உணவு பணவீக்கமானது 8.7 வீதமாக காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாதம் உணவு பணம் வீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் அரசாங்கம் எரிபொருள் விலை தொடர்பிலும் அறிவிப்புக்களை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதத்தில் மேலும் மேலும் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்க கூடிய ஓர் போக்கினை அவதானிக்க முடிவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த அரசாங்கத்தினால் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விலைகளை குறைப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் நாட்டில் வறுமை வெகுவாக அதிகரித்துள்ளது எனவும் இதனால் தாம் மகிழ்ச்சியாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.