சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி
ஐபிஎல் (IPL) தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
இதில் நேற்று (28) நடைபெற்ற லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியானது 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) வீழ்த்தி வெற்றிபெற்றது.
அணிக்காக அதிக ஓட்டங்கள்
அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் கோட்டை என்றழைக்கப்படும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் 17 ஆண்டுகளுக்கு பின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில், இப்போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
அந்த வகையில் போட்டியில் தோனி 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 30 ஓட்டங்களைச் சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 4687 ஓட்டங்களை எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது தோனி 4699 ஓட்டங்களைச் சேர்த்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
