கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டியின் திகதி மாற்றம்: வெளியான காரணம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் திகதி மாற்றப்பட்டுள்ளதாக பி.சி.சி.(BCCI) அறிவித்துள்ளது.
18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்(KKR) - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்(LSG) அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போட்டியின் திகதி
அன்று ராம நவமி கொண்டாட்டம் பல இடங்களில் நடப்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர பொலிசார் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த ஆட்டம் கவுகாத்திக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஏப்ரல் 6ஆம் திகதிக்கு பதிலாக ஏப்ரல் 8ஆம் திகதி மதியம் 3.30 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
You May Like This..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan
