சிறிய ரக வாகனங்களில் நாடாளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்கள்
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிய கார்கள் மற்றும் வான்களில் இன்றைய தினம் (17) நாடாளுமன்றத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறையின் போதும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மிகக் குறைவான சொகுசு வாகனங்களே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு படையினரும் வருவதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இன்றைய தினம் சுமார் 20 உறுப்பினர்கள் வரை நாடாளுமன்றத்திற்கு வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஏற்பட்ட வன்முறையின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுக்கைகள் கூட முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக எஸ்.எம்.சந்திரசேன உட்பட பல உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri