எம்பிக்களுக்கு இரட்டை சலுகையா..! சபையில் அம்பலமான உண்மை
2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு, அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக, பன்னிபிட்டியவில் உள்ள அரசுக்குச் சொந்தமான வியத்புர வீட்டு வளாகத்திலும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
வீர மாவத்தை, தொகுதி 05 இல் அமைந்துள்ள வியத்புரவில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் வகையில், இன்று (07) நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகரிடம் வளாகத்தில் வீட்டுவசதி கேட்டு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு கட்டணத் திட்டம்
அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு பின்பற்றப்படும் நிலையான நடைமுறையிலிருந்து வேறுபட்ட ஒரு சிறப்பு கட்டணத் திட்டம் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, வியத்புர குடியிருப்புக்களை வாங்குபவர்கள் வீட்டின் மதிப்பில் 50வீத ஆரம்பக் கட்டணத்தைச் செலுத்தி, ஒரு வருடத்திற்குள் முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இருப்பினும், எம்.பி.க்களுக்கு, ஆரம்பக் கட்டணம் 25வீதமாக ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள தொகையை 15 ஆண்டுகளுக்குள் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

