கொழும்பு அரசியலில் மீண்டும் ஏற்பட்டுள்ள குழப்பம் - பதவி இழக்கும் அச்சத்தில் எம்.பி.க்கள்
ஐக்கிய தேசியக்கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான கூட்டணி என்ற போர்வையில் சில தலைவர்கள் எம்.பி.க்களை கவர்ந்திழுக்க முயற்சிப்பதாகவும், இது தோல்வியடையும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி நேர்மையுடன் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சில தரப்பு குற்றம்சாட்டுகின்றது.
கூட்டணி செயற்பாட்டிற்கு பெரும் தடை
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றபோது இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி குறித்து கட்சித் தலைமையிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் சில தலைவர்கள் தனியாகச் சென்று வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதால், இந்த மனநிலை கூட்டணி செயற்பாட்டிற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் சில தரப்புகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இரு கட்சிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களில் பெரும்பாலோர், இரு கட்சிகளும் ஒன்றிணையாமல் வெற்றியை அடைய முடியாது என்றும் கட்சித் தலைமைகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், சில தலைவர்கள் UNP-SJB கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், சிலர் தலைமைப் பதவிகளை இழக்கலாம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan