மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரணம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த எம்.பி
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது உயிரிழந்த இளம் தாயாரான வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ப.சத்தியலிங்கம் நேரில் சென்று ஆராய்ந்தார்.
இறந்த தாயார் மற்றும் சிசுவின் குடும்பத்தினரை நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று (23) மன்னாரில் உள்ள அவர்களது இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
கோரிக்கை
இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இவ்விடயம் தொடர்பில் தமக்கான நீதியைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில், உயிரிழந்த தாயாரின் ஆவணங்களைப் பரிசோதித்து அதன் விபரங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        