ஈஸ்டர் தாக்குதல்கள் விசாரணைக் குழுவின் நியமனத்தை விமர்சித்த முன்னாள் எம்.பி
பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் வேண்டுகோளுக்கிணங்க ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக் குழுவுக்கு நியமிக்கப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள பிரதானி ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் டிஐஜி ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனம் தொடர்பில் பொதுஜன பெரமுன முன்னாள் எம்.பி சாந்த பண்டார கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசும் போதே இவ்வாறு விமர்சித்துள்ளார்.
தீர்க்கமான முடிவு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பாதுகாப்பு தொடர்பில் முடிவெடுக்கும் போது அரசு என்ற வகையில் இதைவிட பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும்.இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாமும் பேராயர் மெல்கம் ரஞ்சித்துக்கு மதிப்பளிக்கிறோம்.
ஆனால் நாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றுகையில் அரச தரப்பு என்ற வகையில் சிந்தித்து தீர்க்கமான முடிவெடுப்பதே சிறந்த நிர்வாக கட்டமை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
