அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்

Parliament of Sri Lanka Vasudeva Nanayakkara Sri Lanka Final War
By Dharu Aug 06, 2024 01:05 PM GMT
Report

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து இருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கட்சியின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரத்ன நியமிக்கப்படடுள்ளார்.

எதிர் வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இதற்கு முன்னர் அவர் அறிவித்திருந்தார்.

மன்னாரில் காணி அபகரிப்பு: ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னாரில் காணி அபகரிப்பு: ஜனாதிபதியிடம் கோரிக்கை

வாசுதேவ நாணயக்கார

தற்போது 85 வயதை கடந்துள்ள வாசுதேவ நாணயக்கார, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார்.

ஜனவரி 3, 1939 இல் தென் மாகாணத்தில் உள்ள உடலமட்ட கிராமத்தில் பிறந்த வாசுதேவின் தந்தை பிரான்சிஸ் நாணயக்கார ஒரு வர்த்தகராவார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர் | Mp Preparing To Retire From Politics

இவரது தாயார் ஐரீன் எலிசபெத் விஜேசேகர திஸாநாயக்க.

நான்கு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் கொண்ட வாசுதேவ நாணயக்காரவின் குடும்பத்தில், திரைப்பட தயாரிப்பாளர் யசபாலித நாணயக்கார மற்றும் அரசியல் பிரமுகர் ஹேமகுமார் நாணயக்கார ஆகியோர் அவரின் சகோதரர்களாவர்.

காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், இலங்கை சட்டக் கல்லூரியில் தகுதிபெற்று, சட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றியவராவார்.

நாணயக்கார 1958 இல் இலங்கை சமசமாஜக் கட்சியில் (LSSP) முதலில் இணைந்தார். 1970 நாடாளுமன்றத் தேர்தலில் சமசமாஜக் கட்சிக்காக கிரியெல்ல தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் தொடர்பில் வெளியான போலிச் செய்திகள்! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை

தேர்தல் தொடர்பில் வெளியான போலிச் செய்திகள்! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை

ஜனாதிபதி தேர்தல்

நாணயக்கார பின்னர் சம சமாஜக் கட்சியை விட்டு வெளியேறி 1977 இல் புதிய சமசமாஜக் கட்சியை (NSSP) உருவாக்கினார். ஆனால் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

1982ல் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அவர், .17,005 (0.26%) வாக்குகளை மாத்திரம் பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையளில், 1983 ஜூலை கலவரத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கம் புதிய சமசமாஜக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (CP) ஆகியவற்றைத் தடை செய்தது.

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர் | Mp Preparing To Retire From Politics

இதன்பின்னர் நாணயக்கார, கருணாரத்ன, ரோஹண விஜேவீர உள்ளிட்ட இடதுசாரி அரசியல்வாதிகள் 1985 தடை நீக்கப்படும் வரை தலைமறைவாகவே காணப்பட்டனர்.

அதன் பின்னர், 1987 இல், , புதிய சமசமாஜக் கட்சி, உள்ளிட்ட சில கட்சிகள் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியுடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கூட்டணியை உருவாக்கியது.

இந்நிலையில், 1989ல் இடம்பெற்ற பொது தேர்தலில் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நுளைந்தார் வாசுதேவ நாணயக்கார.

1994 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, நாணயக்கார நவசமசமாஜக் கட்சியை விட்டு வெளியேறி மக்கள் முன்னணியின் (PA) கூட்டணியான லங்கா சமசமாஜ கட்சியில்  மீண்டும் இணைந்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின்  நாடாளுமன்ற வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட அவர் பின்னர் முன்னாள் ஜனாதிபதித் சந்திரிகா பனண்டாரநாயக்க அரசில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறி 1999 ஜனாதிபதித் தேர்தலிலும் ஒரு வேட்பாளராக போட்டியிட்டார்.

வங்கி வைப்புகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

வங்கி வைப்புகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

உள்நாட்டு போர்

இதனை தொடர்ந்து 2006 மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் மேயர் வேட்பாளராகப் நாணயக்கார போட்டியிட்டார். இதில் பெரும்பான்மை இழந்த நாணயக்கார தரப்பு சபையில் எதிர்க்கட்சியாகியது. தலைவரானார்.

இதன் பின்னர் இடம்பெற்ற 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட நாணயக்கார 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர் | Mp Preparing To Retire From Politics

பின்னர் மகிந்த ராஜபக்ச ஆதரவு முகாமை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

2020 இல் நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார், ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் எதிர்க்கட்சிக்கு சென்றார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போது, ​​பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வாசுதேவ கடுமையான வார்த்தைகளால் வசைபாடியமை பேசுபொருளான விடயமாகும்.

இலங்கையின் உள்நாட்டு போரின் போது போர் பகுதிகளில் வாழும் மக்கள் அதனுள் சிக்குண்டு இறத்தல் அபாய நிலைக்கு உற்படல் இடம் பெறலாம். ஆனால் பொது மக்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப் படும் இலங்கையில் நடக்கும் போர் மிருகத்தனமான மிலேட்ச செயலாகவே தாம் பார்ப்பதாகவும் இப்போரை உன்னிப்பாக நோக்குமிடத்து ஒரு சமுகத்தினரை அழித்தொழிக்கும் இனவழிப்பு நடவடிக்கை (genocide) என்றும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

அரச பொய் பரப்புரைகளை எதிர்த்தல் இலங்கை அரச ஊடகங்கள் வெளியிடும் பொய் பரப்புரைகளை அப்பப்போது சுட்டிக் காட்டி அரசாங்கத்தை சவாலுக்குட்படுத்தியிருந்தார்.

கடமைகளை முறையாக பின்பற்றாத கோட்டாபய: மொட்டு எம்.பி சாடல்

கடமைகளை முறையாக பின்பற்றாத கோட்டாபய: மொட்டு எம்.பி சாடல்

புறக்கோட்டை குண்டு வெடிப்பு 

கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு நிகழ்வு தொடர்பாக இலங்கை அரச ஆதரவு ஊடகங்கள் தமிழீழ வீடுதலைப் புலிகளே இந்த குண்டு வெடிப்பை நடத்தினர் என்ற பரப்புரைகளை மறுத்து அதற்கான காரணிகளையும் விளக்கி இருந்தார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர் | Mp Preparing To Retire From Politics

ஊடகச் சுதந்திரம் தொடர்பில் ஆயுத பலத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்குமுறைகளுக்கு உட்படுத்துவோர் பொதுமக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், தமிழ் சட்டத்தரணிகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களின் சார்பில் வாதிட முன்வரும் தமிழ் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை தேசத்துரோகிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை நீக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்த தலைவராவார்.

இவ்வாறான அரசியல் பின்னணியை கொண்ட வாசுதேவ நாணயக்கார தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலால் ஐஎம்எப் உடன்படிக்கையில் மாற்றம் ஏற்படுமா..

ஜனாதிபதி தேர்தலால் ஐஎம்எப் உடன்படிக்கையில் மாற்றம் ஏற்படுமா..

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, Bielefeld, Germany, Nuremberg, Germany

07 Sep, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Mönchengladbach, Germany

05 Sep, 2024
மரண அறிவித்தல்

நல்லூர் தெற்கு, Sucy-en-Brie, France, Croydon, United Kingdom

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarbrough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, ஜேர்மனி, Germany, Catford, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, வெள்ளாம்போக்கட்டி

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

11 Sep, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சூரிச், Switzerland

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

07 Sep, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US