போதை கலாச்சாரத் தொடர்புடையவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - கந்திசாமி பிரபு எம்.பி விசனம்
கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும் தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்திசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
நேற்று(28.07.2026) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்ற சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக, வீடு அமைப்பதற்கென நிதிகளை நாங்கள் பங்களித்துக் கொண்டு வருகின்றோம்.
அதேவேளை, வீதி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிகளுக்கு ஏற்ற விதமான உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான மேம்பாடுகள், விவசாயம் தொடர்பான திட்டங்கள் மற்றும் கிராமங்களின் ஊடாக வளர்ச்சி செய்யக்கூடிய மக்கள் சக்தித் திட்டங்கள், கடற்றொழிலாளர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான விடயங்கள் என அனைத்து விடயங்களுக்கும் தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிதிகளை வழங்கி வருகின்றது.

இதன் ஊடாக நமது பகுதியில் இருக்கின்ற அனைத்துத் தரப்பினரும் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும் தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
மக்கள் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஆணைதந்திருந்தார்கள்.
ஆனால், ஆணையினை நாங்கள் நிறைவேற்றும்போது, இன்று மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.





ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 ஜோடிகள்.. யார்யாரெல்லாம் என்று பாருங்க Cineulagam