துனிசிய ஜனாதிபதியை விமர்சித்த எம்.பிக்கு சிறை!
துனிசிய ஜனாதிபதி கைஸ் சையத் (Kais Saied) குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ததற்காக, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் சைதானிக்கு நீதிமன்றம் எட்டு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சமீபத்தில் துனிசியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கின்போது, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஜனாதிபதி மேற்கொண்ட விஜயத்தை எள்ளிநகையாடும் வகையில் சைதானி பதிவிட்ட கருத்தே இந்தத் தண்டனைக்குக் காரணமாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜனாதிபதி பார்வையிட்டபோது, அவரை "கழிவுநீரகற்றல் மற்றும் மழைநீர் வடிகாலுக்கான உச்ச தளபதி" என்று சைதானி கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
சிறைத்தண்டனை
மேலும், ஏழை எளிய மக்களுடன் புகைப்படம் எடுப்பதையே ஜனாதிபதி ஒரு பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

தொலைத்தொடர்பு வலயமைப்புகள் மூலம் மற்றவர்களை அவமதித்ததாகக் கூறி சைதானிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
துனிசிய சட்டப்படி, சமூக வலைதளங்கள் வாயிலாக ஒருவரைப் புண்படுத்துவது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.
கனமழை
2022இல் தேர்ந்தெடுக்கப்பட்ட சைதானி, ஆரம்பத்தில் ஜனாதிபதியின் ஆதரவாளராகவே இருந்தார். ஆனால், ஜனாதிபதி அனைத்து அதிகாரங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டு, பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறார் என்று கூறி அண்மைக்காலமாக அவர் கடுமையான விமர்சகராக மாறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கையானது, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று மனித உரிமை அமைப்புகள் மற்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
துனிசியாவில் கடந்த மாதம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam