ரணிலின் கொலைமுகமே கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சி: அவதானிப்பு மையம் கண்டனம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொலை முகத்தின் வெளிப்பாடே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் என்று அனைத்துலக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்திற்கும்,
மனித உரிமைகளுக்கும் உள்ள மதிப்பை இந்த நிகழ்வு நன்கு எடுத்துக்காட்டுவதாகவும்
அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் குறித்து அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு,
கொலை முயற்சி
'கடந்த மே 02 ஆம் நாளன்று, வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் சமூக மட்ட விளையாட்டு வீரர்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் கலந்து கொண்ட வேளையில் அவர் மீது கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் பிரதேச இளைஞரைப் போல இளைஞர்கள் மத்தியில் நின்ற சில நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்தமையும், அவர் இராணுவப் புலனாய்வாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதுடன் பதற்ற நிலையும் உருவாகியது.
இந் நிலையில் இராணுவப் புலனாய்வாளர் என சந்தேகிக்கப்படும் ஒரு இளைஞர் கஜேந்திரகுமார் மீது துப்பாக்கியை நீட்டி குறி வைத்து அவரை சுட முற்பட்ட வேளை அங்குள்ள இளைஞர்கள் சுதாகரித்தமையால் துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது.
அத்துடன் பிரதேச இளைஞர்கள் இராணுவப் புலனாய்வாளர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட அவர்கள் ஓட்டம் எடுத்துள்ளனர்.
பேரினவாதிகளின் தப்பு கணக்கு
ரணில் அவர் மிகவும் மென்மையானவர் என்றும், நல்லவர் என்றும் தென்னிலங்கை முதல் மேற்குலகம் வரையில் பிரசாரம் செய்யப்படும் நிலையில், அவரின் கொலை முகத்தை வரலாற்றிலும் இம்முறை ஆட்சியின் துவக்கத்திலும் நாம் கண்டுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் முயற்சியும் இடம்பெற்றிருக்கிறது.
மக்களின் வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு, சிறுப்புரிமைகளைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது இவ்வாறான கொலை முயற்சித் தாக்குதலை மேற்கொள்ளுகின்ற ரணில் விக்ரமசிங்க, சாதாரண தமிழ் மக்களை ஒடுக்கி அழிக்க எத்தகைய திட்டங்களை தீட்டுவார் என்பதையும், அவரின் உண்மையான கொலை முகத்தையும் பன்னாட்டுச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் கஜேந்திரகுமார் இலக்கு? தனது தந்தையார் குமார் பொன்னம்பலம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் வெளிநாட்டில் அவர் குடும்பத்துடன் குடியேறி விடுவார் என்று பேரினவாதிகள் தப்பு கணக்கு போட்ட போது, நீதிக்காக ஏங்கும் தமிழ் மக்களை விட்டுட்டு நான் ஒரு போதும் அரசியலில் இருந்து ஒதுங்க மாட்டேன் என்று தமிழ் மக்களின் கண்ணீர் மீது சபதம் எடுத்தவரே கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
2009 போர் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழர் அரசியலில் புலி நீக்க அரசியலுக்காக திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கினர்.
அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களின் இன அழிப்புக்கு அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதிலும், தமிழர்கள் சுயநிர்ண உரிமையோடு வாழக்கூடிய தனித்துவமான தேசத்துக்குரியவர்கள் என்பதையும் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி வருவதோடு, தமிழர் தாயத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்கு எதிராகவும் தொடர்ந்து சமரசமின்றி போராடி வருகின்றார்.
பேரினவாத அரசு
குறிப்பாக தமிழ் தலைமைகள் ஜ.நாவில் கால அவகாசம் பெற்றுக்கொடுத்த வேளையிலும் அதற்கு எதிராக குரல் எழுப்பியதுடன், பேரினவாத அரசுக்கு பல்வேறு தமிழ் தலைமைகளும் காலம் காலமாக முண்டு கொடுத்து இலங்கை பேரினவாத அரசை அனைத்துலக அரங்கில் காப்பாற்றி வருவதையும் தமிழ் மக்களின் உணர்வில் நின்று எதிர்க்க வேண்டும் என்பதில் அவர் ஒருபோதும் பின்னிப்பதில்லை.
தமிழ் மக்களின் நிலை நின்று பல விமர்சனங்கள், சவால்களுக்கு மத்தியில், சளைக்காமல் அக்கட்சி பயணம் செய்த நிலையில் சுமார் பத்தாண்டுகளின் பின்னர் இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியம் தூய்மையான திசையில் பயணிக்கக்கூடாது என்பதை இலக்காகக் கொண்டே இந்த தாக்குதல் முயற்சி நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
பல தரப்பிலும் கண்டனம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மீதான கொலை முயற்சிக்கு பலதரப்பட்டவர்களும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையில் எத்தனை ஆட்சி மாறினாலும், எத்தனை சிங்கள ஆட்சியாளர்கள் மாறினாலும், அவர்கள் எத்தனை நல்லெண்ண நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினாலும் அவை ஒருபோதும் தமிழர் நலனுக்கு ஒரு சிறிதும் உதவப்போவதில்லை என்று தமிழ் நாட்டை சேர்ந்த தலைவர்கள் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இனப்படுகொலைகள்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் நாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத ஜனநாயக சூழல் காணப்படுகிறது என்றால் அப்பாவி தமிழ் மக்களின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்? அவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதனை சிந்தித்து பாருங்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் மீதான இனப்படுகொலைகள் இலங்கை அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதுடன், ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களையும், இனப்படுகொலை செய்து வந்துள்ளது.
தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், சிவனேசன், ஜோசப் பரராஜசிங்கம் முதலியோர் சிறீலங்கா அரசாலும், அதன் கீழ் இயங்கும் துணை ஆயுதக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சனநாயகத்திற்கும், மனித உரிமைகளிற்கும் சாவு மணி அடிக்கும் நோக்கில் தலைவர்களை இவ்வாறு இலங்கை அரசு படுகொலை செய்து வருகின்றது.
அத்துடன், தமிழ் மக்களின் பல்வேறு நிலைப்பட்ட பிரதிநிதிகளுக்கும் தாக்குதல்கள், மிரட்டல்கள், கொலை முயற்சிகள், சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற வழிகளில் அரசும், இராணுவமும், ஆயுதக் குழுக்களும், அச்சுத்தல்களை விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான அமைகின்றது. இதனை வண்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பிலும் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல வேண்டும்.
அதாவது இலங்கை அரசு நடாத்திய இத் தாக்குதலுக்கு, இலங்கை அரசே விசாரணை நடாத்துவது என்பது இனப்படுகொலைக் குற்றத்திற்கு இலங்கை நீதியாக இருப்பதற்கு ஒப்பானது.
எனவே, சிறீலங்கா அரசின் அனைத்து இனப்படுகொலைகளுக்கும், இதுபோன்ற அடக்குமுறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கும் பன்னாட்டு விசாரணை வழியாக நீதியை வழங்க வேண்டும் என்பதையும் தமிழ் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
