மீண்டும் ஒரு கருப்பு ஜூலை! நாடாளுமன்றத்தில் எச்சரித்த அர்ச்சுனா
இலங்கையில் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை போன்றதொரு அவல நிலை ஏற்படுவதற்கு வழிவகுக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
இன்று(17) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தையிட்டி விகாரையை உடைப்பது வெறுமனே பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதோடு பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்க வாய்ப்புள்ளது.
இரணைமடுவில் புதிதாக விகாரைகள் கட்டப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
விகாரைகளை இனிமேலும் பொது மக்களுடைய காணிகளில் அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்ககூடாது” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஹரினி அமரசூரிய அண்மையில் வடக்கிலுள்ள ஒரு பாடசாலையொன்றுக்கு விஜயம் மேற்கொண்டதை தெரிவித்து அவர் ஏற்கனவே பாடசாலைகளை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri