மக்களின் பேராதரவில் சுவிஸில் மீண்டும் திரைக்கு வரும் போராட்டம் திரைப்படம் - இன்றே பதிவுசெய்யுங்கள்..!
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள போராட்டம் திரைப்படம், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிட்சர்லாந்தில் மீண்டும் திரையிடப்படவுள்ளது.
பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில், பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சுவிஸ் திரையரங்குகளில் ஏற்கனவே திரையிடப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மீண்டும் திரைக்கு வரும் திரைப்படம்..
இந்த நிலையில், அதிகளவான மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க cine star 6900 lugano திரையரங்கில் மீண்டும் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
cine star 6900 lugano திரையரங்கில் எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

உங்களுடைய ஆசனங்களை முன் பதிவு செய்து கொள்ள செல்வா - 0764930594 மற்றும் சிவா - 0787182505 ஆகிய தொடர்பு இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.
மக்களின் பேராதரவால் மீண்டும் திரையரங்கிற்கு வரும் போராட்டம் திரைப்படம், அடுத்த தலைமுறையினரும் பார்க்க வேண்டிய முக்கியமான படைப்பாகக் குறிப்பிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சுவிட்சர்லாந்தை போன்று மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல இடங்களில் போராட்டம் திரைப்படம் திரையிடவுள்ளது, உங்கள் ஆசனங்களை தொடர்பு இலக்கங்களுக்கு தொடர்புக் கொண்டு முன் பதிவு செய்துக் கொள்ளலாம்.



