அமெரிக்காவில் மலைச்சிங்கம் தாக்கியதில் பெண் பலி
அமெரிக்காவின் கொலொராடோ மாநிலத்தின் லாரிமர் கவுண்டி, க்ராசியர் மலைப் பாதையில் ஒரு மலைச் சிங்கம் தாக்கியதில் பெண் ஓருவர் கொலல்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் சடலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையேறிகள் பாதையில் விழுந்து கிடந்த பெண் ஒருவருக்கு அருகாமையில் இருந்த மலை சிங்கத்தை கவனித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மலையேறிகள் கற்களை எறிந்து சிங்கத்தை தள்ளி, பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அருகாமையில் சென்ற போது பெண் உயிரிழந்த நிலையில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
“கொலொராடோவில் மலை சிங்க தாக்குதல்கள் மிகவும் அரிதானவை,” என வனவிலங்குத்துறை பேச்சாளர் காரா வான் ஹூஸ் தெரிவித்தார்.
1990 முதல் இதுவரை 28 தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாகவும், இறுதியாக 1999ம் ஆண்டில் இவ்வாறு மலைச்சிங்கம் தாக்கி மரணமொன்று பதிவாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர் யார், இறந்த காரணம் என்ன என்பதை லாரிமர் கவுண்டி கல்லூரி அதிகாரிகள் விரைவில் வெளியிட உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan