புதுக்குடியிருப்பில் டீசல் தீர்ந்தமையால் பெரும் சிரமத்தில் வாகன ஓட்டிகள் (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக எதுவித எரிபொருட்களும் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஒரு கொள்கலன் பெட்ரோலும் ஒரு கொள்கலன் டீசலும் கிடைத்துள்ளதுடன், மண்ணெண்ணெய் கடந்த ஒருவாரமாக இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை தொடக்கம் டீசலினை வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
உடையார்கட்டு, சுதந்திரபுரம், உள்ளிட்ட பத்து கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் இருந்து வாகனங்கள் டீசலினை பெற்றுக் கொள்ள வந்துள்ளபோதும் காலை 10.30 மணியுடன் டீசல் நிறைவடைந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்கள்.
இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்குப் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் ஏக்கர் ஒன்றுக்கு 15 லீற்றர் டீசல் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையிலும், எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.
தற்போது நாட்டில் அதிகளவான வெப்பநிலை பதிவாகி வருகின்றது. இதனால் மின்சாரம் நாள்தோறும் ஆறு மணிநேரத்திற்கும் அதிகமாகத் துண்டிக்கப்படுகின்றது. மேட்டுநில பயிர்செய்கையாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் விவசாயம் கடும் வெய்யில் காரணமாகப் பாதிக்கப்படுவதுடன், மண்ணெண்ணெய் இல்லாத நிலையில் நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாதுள்ளது.
அத்துடன் மின்சார வசதியினையும் தாம் பெற்றுக்கொள்ளமுடியவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
விவசாய செய்கை காலம் என்பதால் எரிபொருளுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருவதால் தாம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.










siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
