மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்! - இருவர் பலி
கண்டி மாவட்டம், கோகரல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புள்ளை குருநாகல் வீதி, 15ஆம் மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொல்கொல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதேவீதியில் பயணித்த லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
26, 41 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri