வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் சிக்கிய மற்றுமொரு ஆதாரம்
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டுக்கொல்ல துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் - புத்தல சாலையில் 16 ஆவது தூண் அருகே உள்ள காட்டில் கைவிடப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் அம்பலாந்தோட்டை பகுதிக்கு வந்து கதிர்காமம்-புத்தல சாலை வழியாக கெகிராவ பகுதிக்குச் சென்றமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் இயந்திரக்கோளாறு
இந்த மோட்டார் சைக்கிள் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, காட்டில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த மாதம் (22) பிரதேச சபையின் தலைவரின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |