முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு(Photos)
மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மாலை முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து இடம்பெற்றவேளை அவ்வீதி வழியே சென்ற வாகனமொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் விபத்து இடம்பெற்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
குறுக்குப்பாதையிலிருந்து பிரதான வீதிக்கு நுழைந்த முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முச்சக்கரவண்டியினைச் செலுத்தியவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நாகப்பன் ராமையா என்பவரே உயிரிழந்தவர்.
செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இச்சடலத்தினை திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.
சந்திவெளி பொலிஸார் விபத்துச் சம்பவம் குறித்து சாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மரணமடைந்தவர் பேக்கறி உரிமையாளராவார்.
இவர் முச்சக்கரவண்டியில்
கடைத்தெருவிற்குச் சென்ற வேளை விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri