அம்பாறை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி: ஒருவர் படுகாயம்
அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (21.10.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது எதிரில் வந்த மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதன்போது, பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 51 மற்றும் 77 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பொத்துவில் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார் எனவும், பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்து தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
