ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகையை அதிகரிக்க தீர்மானம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் என்ற வைப்புத் தொகையை 26 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கான வைப்புத் தொகையை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 31 இலட்சம் ரூபாயாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
வைப்புத் தொகை
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் வைப்புச் செய்யக் கூடிய தொகையில் 25 இலட்சம் ரூபாயை திரும்பப் பெறக்கூடிய தொகையாகவும், எஞ்சிய ஒரு இலட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்த முடியாத வைப்புத் தொகையாகவும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுயேச்சை வேட்பாளரின் வைப்புத் தொகையில், 30 இலட்சத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam