தமிழர் பகுதியில் பொலிஸார் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் விபத்து
வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துளள்னர்.
வைரவபுளியங்குளம், வைரவர் கோயில் வீதி ஊடாக இளைஞர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது அப்பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொபொலிஸார் லிசார் அவர்களை நிறுத்த முற்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள், பொலிஸாரின் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிள் வேகமாக பயணித்துள்ளனர்.
வாகனத்தை நிறுத்திய பொலிஸார்
இந்நிலையில் தொடருந்து நிலைய வீதியில் இருந்து வைரவர் கோவில் வீதி ஊடாக சென்று வைரவ கோயிலுக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri