மோட்டார் சைக்கிள் கோர விபத்து - 21 வயது இளைஞர் பரிதாப மரணம்
புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவிகம வீதியில் ஏற்பட்ட பயங்கர வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த பாலத்தின் பாதுகாப்பு வேலியுடன் பலமாக மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தீவிர சிகிச்சை
விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மற்றும் அதன் பின் இருக்கையில் பயணித்தவர் ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி 21 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக அவசர சிகிச்சைகளுக்காகப் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கருவலகஸ்வெவ பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri