கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு
கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பரந்தன் - முல்லைத்தீவு ஏ - 35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் நேற்று பகல் வரை குறித்த மோட்டார் சைக்கிள் அனாதரவாக விடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிள் சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை பிரதேச மக்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.
இந்த மோட்டார் சயிக்கிள் களவாடப்பட்டு கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
