திருகோணமலையில் இறுதி செய்யப்பட்ட வேட்பு மனு தாக்கல்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த 17 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும் மற்றும் 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையிலேயே குறித்த ஏற்றுக்கொள்ளல் இடம்பெற்றுள்ளது.
இதில் மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.

பங்கருக்குள்ளேயே வெடிக்கப்போகும் ஈரானின் அணுகுண்டுகள்!! ஈரான் ஊடகவியலாளர் கூறுகின்ற அச்சம்தரும் தகவல்கள்
வேட்புமனு தாக்கல்
வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், தேசிய ஜனநாயக முண்ணனி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை , சரியான முறையில் விண்ணப்பம் கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் இவை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
