இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையினுடைய பாதுகாப்பை இஸ்ரேல் உறுதிசெய்யவேண்டும் என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதன்படி இராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகி விரைவாக இராஜதந்திரப் பாதைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான வலியுறுத்தலை விடுக்குமாறும் அமெரிக்க தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கு விடுத்துள்ள செய்தியில் இதனை கூறியுள்ளார்.
இஸ்ரேலியப் படைகள்
இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானில் ஐ.நா.படைகளை தாக்குவதாக வெளியான செய்திகளை மேற்கோள் காட்டியே லொயிட் ஒஸ்டின் இதனை தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 34 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது.
இந்த போரின் கொந்தளிப்பை தகர்த்தி ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் அமைதி காக்கும் படையினர் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |