அணு ஒப்பந்தம் குறித்து ஈரானின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக “தேவையான எதையும் செய்யத் தயாராக உள்ளோம்” என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தையை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மாஜிட் தகாட் ராவான்சீ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
ஒப்பந்தம் நடைபெற தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம் எனவும் ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தை அறைக்கு முழு நேர்மையுடனும் நல்லெண்ணத்துடனும் நுழைவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்புகளிடமும் அரசியல் மனப்பாங்கு இருந்தால் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஓமான் மற்றும் சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே இரண்டு சுற்று மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
மூன்றாவது சுற்று இந்த வியாழக்கிழமை நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு திட்டம்
அமெரிக்கா ஈரானை தாக்கும் சாத்தியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அது “பெரிய சூதாட்டமாக” அமையும் என்றும், முழு பிராந்தியத்தையும் பாதிக்கும் என்றும் டக்த்-ரவாஞ்சி எச்சரித்துள்ளார்.

எங்களின் பாதுகாப்பு திட்டங்களுக்கு அமைவாக தாக்குதல்களுக்கு பதிலளிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார பேச்சுவார்த்தையில் ஈரானின் ஏவுகணை திட்டம் அல்லது பிற விவகாரங்கள் பேசப்படுமா என்ற கேள்விக்கு, வரவிருக்கும் கலந்துரையாடலின் முதன்மை நோக்கம் அணு விவகாரமே என அவர் தெளிவுபடுத்தினார்.