சிஎஸ்கே அணியிலிருந்து பதவி விலகிய முக்கிய நபர்..!

Chennai Super Kings TATA IPL IPL 2026
By Shadhu Shanker Jul 13, 2026 11:06 AM GMT
Report

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த முடிவு, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் பிளெமிங் தரப்பு இடையே நடைபெற்ற கலந்தாலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்த மர்ம நபர்: வெளியான உண்மை..!

ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்த மர்ம நபர்: வெளியான உண்மை..!

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ், இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மேலும், பல முறை பிளே-ஆஃப் சுற்றுக்கும், 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே, அதன் பின்னர் தொடர்ந்து மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியுள்ளது.

இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார். 53 வயதான ஸ்டீபன் பிளெமிங், 2008ஆம் ஆண்டு தொடக்க ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வீரராக விளையாடினார்.

அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று, 2026 சீசன் வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார்.

நீர்கொழும்பு சிறை வன்முறை: கைதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்

நீர்கொழும்பு சிறை வன்முறை: கைதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்

 ஸ்டீபன் பிளெமிங் விலகல்

அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும், 12 முறை பிளே-ஆஃப் மற்றும் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அணியை வழிநடத்தியுள்ளார்.

சிஎஸ்கே அணியிலிருந்து பதவி விலகிய முக்கிய நபர்..! | Csk Head Coach Stephen Fleming Part Ways 17 Years

சிஎஸ்கே நிர்வகித்து வரும் தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 தொடரில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளெமிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ளார்.

பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டீபன் பிளெமிங், "18 ஆண்டுகள் என்பது என் விளையாட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத காலம்.

மிகுந்த நன்றியுடன் விடைபெறுகிறேன். பயிற்சியாளராக சிஎஸ்கேவுடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறப்பான அனுபவம். நாங்கள் இணைந்து படைத்த சாதனைகள் குறித்து பெருமை கொள்கிறேன். அந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்

இலங்கையின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்

You May Like This..

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US