அணுவாயுதம் குறித்த ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைனின் பதில்
உக்ரைன் அணு ஆயுதங்களை பெற முயற்சித்து வருவதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டை உக்ரைன் கடுமையாக மறுத்துள்ளது.
குறிப்பாக, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உதவியுடன் அணு ஆயுதங்களை பெற உக்ரன் முயற்சி செய்கிறது என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டு “பொய்யானது” என உக்ரைன் தெரிவித்துள்ளது.
பொய்யான தகவல்களை பரப்புவதில் புகழ்பெற்ற ரஷ்ய அதிகாரிகள் மீண்டும் பழைய ‘டெர்ட்டி பாம்’ (dirty bomb) கதையை உருவாக்க முயல்கிறார்கள்” என உக்ரைன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹெரோஹி தியாக்கி தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
“இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை உக்ரைன் பல முறை மறுத்துள்ளது. இப்போதும் அதிகாரப்பூர்வமாக மீண்டும் மறுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் ‘தகவல் குண்டுகளை’ சர்வதேச சமூகத்தினர் நிராகரித்து கண்டிக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ரகசியமாக உக்ரைனுக்கு அணு ஆயுத உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கத் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் வெளிநாட்டு புலனாய்வு சேவை குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்தச் சான்றுகளையும் ரஷ்யா வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன்–ரஷ்யா போரின் பின்னணியில் தகவல் போரும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.