மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருகோணமலை - வான் எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலியடி சந்தியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்து
வான் எல பகுதியில் இருந்து சிறாஜ்நகர் 97ஆம் கட்டைக்கு நேற்று காலை 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்று பயணித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்த நிலையில்
அதில் பயணித்த பெண்ணும் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சிராஜ் நகர் 97ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான 44 வயதான ஆர்.பௌவுசியா எனும் பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணை
உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை வான் எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri