தமிழரசுக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸை தடை செய்யும் பிரேரணை.. நாடாளுமன்றத்தின் முடிவு!
இன மற்றும் மதப் பெயர்கள், அடையாளங்களைக் கொண்ட கட்சிகளைத் தடை செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொண்டு வரவிருந்த தனிநபர் பிரேரணை இன்று(10.10.2025) நாடாளுமன்றத்தில் பெரும் வாதத்தைத் ஏற்படுத்தியது.
அந்த முயற்சி தங்களின் கடும் எதிர்ப்பால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெயர்களை வைத்து இந்தக் கட்சிகள் இலங்கையில் பதிவில் இருக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரேரணை ஒன்றை இன்று கொண்டு வந்திருந்தார்.
குறித்த விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவித்த சாணக்கியன்,
“இந்தப் பிரேரணைக்கு எதிராக இன்று என்னால் நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கடுமையான விவாதங்களுக்கு மத்தியில் அந்தப் பிரேரணை முயற்சி முறியடிக்கப்பட்டது.
முறியடிக்கப்பட்ட முயற்சி
இதற்கு எமக்குப் பல கட்சிகளின் ஆதரவு இன்று கிடைக்கப் பெற்றது. 2009ஆம் ஆண்டளவில் இதே போன்ற காரணத்தைக் காட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்ற வழக்கு வைக்கப்பட்டது.
அதனை எதிர்த்து எமது கட்சியின் மறைந்த முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவினால் இந்த விடயம் கையாளப்பட்டு, இதற்கான வழக்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அதனை எதிர்த்து வாதிட்டு வெற்றிகரமாக நீதிமன்றத்தில் அந்த முயற்சியை முறியடித்தார்” என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து
இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, “இன மற்றும் மத அடையாளங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைத் தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவதற்கான நடவடிக்கையைத் தடை செய்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அதைத் திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளதாலும், அது மீளப் பெறப்பட்டது” என்று கூறியுள்ளார்.
இந்தப் பிரேரணைக்குப் பின்னால் உள்ள தனது ஒரே நோக்கம் நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதாகும் என ரவி கருணாநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அத்தகைய பிரேரணை அல்லது சட்டத்தைச் செயற்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் இரகசியத்தை சொன்ன அமைச்சருக்கு சிக்கல்! வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முக்கிய சாட்சியாளர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
