நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தனிநபர் பிரேரணை
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தனிநபர் பிரேரணைகள் இரண்டு , புதிய சட்ட மூலங்களாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இது தொடர்பான சட்டமூலங்களை தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணைகளாக முன்வைத்துள்ளார்.
பிரேரணை தாக்கல்
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் 30 சதவீதத்துக்குக் குறையாமல் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 22 அரசியலமைப்புத் திருத்தமாக, ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியலில் 50 வீதத்துக்குக் குறையாத பெண் உறுப்பினர்களை உள்ளடக்குவதை வலியுறுத்தும் சட்டமூலம் ஒன்றும் நாடாளுமன்றத்தில் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
