மாறுவேடத்தில் செவ்வந்தி! விசாரணைகளில் தாயார் வெளியிட்ட தகவல்

Sri Lanka Death Gun Shooting
By Dharu Feb 21, 2025 02:13 PM GMT
Report

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தொடர்பிலான விசாரணையில் அவரது தாயார் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

இஷாராவின் தாயார் கடைசியாக தனது மகளை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் சிசிரிவி காட்சிகளில் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு பார்த்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முக்கிய சந்தேக நபரான பெண், தொடர்பில் பல முக்கிய தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : செவ்வந்தியுடன் தொடர்பில் இருந்த இருவர்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : செவ்வந்தியுடன் தொடர்பில் இருந்த இருவர்

சட்டத்தரணி போல் மாறுவேடம்

சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு துப்பாக்கியைக் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் இஷாரா தொடர்பிலேயே இந்த தகவள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மாறுவேடத்தில் செவ்வந்தி! விசாரணைகளில் தாயார் வெளியிட்ட தகவல் | Mother Who Identified The Sevandhi Sanjeewa Death

மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த இருபத்தி ஆறு வயதுடைய இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற குறித்த பெண்ணைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரி அவரின் புகைப்படத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

அவர் பாதாள உலக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய நபர் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரது குடும்ப பின்னணியை முழுமையாக விசாரித்ததில், அவரது கணவர் தற்போது சிறையில் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு,  துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இஷாரா செவ்வந்தியின் கணவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கொலைகாரனை காதலனாக மாற்றியுள்ள இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கொலைகாரனை காதலனாக மாற்றியுள்ள இலங்கை

ஹெரோயின் கடத்தல்

மேலும், அவரது சகோதரர்களில் ஒருவர் கடந்த ஆண்டு கட்டான பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி வசந்த சுதசிங்க தலைமையிலான குழுவினரால் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மாறுவேடத்தில் செவ்வந்தி! விசாரணைகளில் தாயார் வெளியிட்ட தகவல் | Mother Who Identified The Sevandhi Sanjeewa Death

விசாரணையில் மேலும் தெரியவந்ததாவது, அந்தப் பெண் ஜனவரி 24, 2024 அன்று வெளிநாடு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தனக்கு நெருக்கமான நபர் ஒருவருடன் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும்,  அதன் பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இஷாராவின் தாயார் கடைசியாக தனது மகளை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் சிசிரிவி காட்சிகளில் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு பார்த்ததாக பொலிஸாரிடம் தெரிவத்துள்ளார்.

பூதாகரமாகும் நீதிமன்ற படுகொலை விவகாரம்: புலனாய்வு தரப்பின் புதிய எச்சரிக்கை!

பூதாகரமாகும் நீதிமன்ற படுகொலை விவகாரம்: புலனாய்வு தரப்பின் புதிய எச்சரிக்கை!

பொலிஸ் வட்டார தகவல்

இந்நிலையில் பொலிஸ் வட்டார தகவல்களின்படி, இந்தப் பெண், தற்போது துபாயில் தலைமறைவாக உள்ள கெஹல்பத்தர பட்மே என்ற பாதாள உலகக் கும்பல் தலைவரின் அமைப்பின் நெருங்கிய உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

மாறுவேடத்தில் செவ்வந்தி! விசாரணைகளில் தாயார் வெளியிட்ட தகவல் | Mother Who Identified The Sevandhi Sanjeewa Death

இந்த கும்பலில் போதைப்பொருள் கடத்தலுடன், துப்பாக்கி கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடல் வழியாக நாட்டை விட்டு இஷாரா வெளியேறுவார் என்ற சந்தேகத்தின் பேரில் அதனை தடுக்க பொலிஸார் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திட்டமிடப்பட்ட கொலையின் அனைத்து விபரங்களும் விரைவில் வெளியாகும் என்று பொலிஸ் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US