இரண்டு குழந்தைகளின் தாய் கொலை விவகாரம்!மரண தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்
2009 இல் நுவரெலியாவின், ஹட்டன்- டிக்கோயாவில் இரண்டு குழந்தைகளின் தாயைக் கொலை செய்த குற்றவாளிக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
இறந்தவரின் தந்தையின் சாட்சியத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் தமது மகளுடன் சண்டையிடுவார்.
2009, ஆகஸ்ட் 19ஆம் திகதி, அவர் மனைவியை(தமது மகளை) தாக்கியதன் காரணமாக, தமது மகள் சிறு குழந்தையுடன், தமது வீட்டுக்கு வந்து அடைக்கலம் பெற்றபொழுது, குற்றம் சுமத்தப்பட்டவர், அவரை மீண்டும் அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது மகள், ஏழு நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டதாக சாட்சி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்கள்- பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
அத்துடன் குற்றவாளிக்கு நுவரெலிய நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையில் தலையிட எந்த காரணத்தையும் தாம் காணவில்லை என்றும் அறிவித்தது.





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
