மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் பலி: குழந்தைகள் படுகாயம்
நிட்டம்புவவிலிருந்து ருவன்வெல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்திற்குள்ளானதில் இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவவிலிருந்து ருவன்வெல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியின் வலதுபுறம் உள்ள பக்க வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (27ஆம் திகதி) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதியான (தாய்) மற்றும் சிறு குழந்தை மற்றும் சிறுமியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தாய் உயிரிழந்துள்ளார்.
ருவன்வெல்ல பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்த பெண் 37 வயதுடைய இந்துரானை பிரதேசத்தை சேர்ந்தவராவார். இவர் இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது படுகாயமடைந்த 10 வயது சிறுமி தற்போது கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 4 வயது குழந்தை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
