கோர விபத்தில் தாய், மகள் ஸ்தலத்தில் பலி - ஆபத்தான நிலையில் குழந்தை
அனுராதபுரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்பாவல - கெக்கிராவ பகுதியிலுள்ள வளைவுக்கு அருகில் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
எப்பாவல பொலிஸார்
விபத்தில் 3 வயதுடைய குழந்தை படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 38 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேனின் சாரதி தூங்கியதால் வேன் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி கைது
வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக எப்பாவல வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
