மகன் உறங்குவதில்லை என பொலிஸில் முறைப்பாடு தாய்
தம்புள்ளை பிரதேசத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மகனை தூங்க வைக்க முடியாத நிலையில், தாய் ஒருவர் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் இரவு 9 மணியளவில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பகுதியில் இருக்கும் முறைப்பாடு செய்த வீட்டுக்கு தம்புள்ளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தகர்கள் சென்றுள்ளனர்.
வீட்டுக்கு சென்ற பொலிஸார் வீட்டுக்கு எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒலி எழுப்பியுள்ளனர். எனினும் வீட்டிற்குள் இருந்து எவரும் வெளியில் வராத காரணத்தினால், பொலிஸார் வீட்டுக்கதவை தட்டியுள்ளனர்.
மகன் உறங்காததால் பொலிஸாரை அழைத்து பயறுத்த தொலைபேசி அழைப்பை எடுத்தேன்
அப்போது வீட்டுக்குள் இருந்து வந்த பெண்ணிடம் முறைப்பாட்டுக்கு அமைய வந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். “ஐயோ தற்போது மிகவும் தாமதமாகி விட்டது.மகன் தூங்கி விட்டான். நான் 7 மணிக்கு பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தேன். தற்போது ஒன்பது மணி ஆகிவிட்டது” என பெண் பதிலளித்துள்ளார். தாயின் இந்த பதிலை கேட்ட பொலிஸார் மேலதிமாக அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, தனது பிள்ளை மூன்றாம் ஆண்டில் படிப்பதாகவும் சீக்கிரமான உறங்குமாறு கூறினால்,பிள்ளை உறங்காது,விளையாடிக்கொண்டிருப்பதாகவும் மற்றைய பிள்ளைகளை தூங்க விடாது, தொல்லை கொடுப்பதாகவும் தந்தையையும் உறங்விடுவதில்லை எனவும் பெண் கூறியுள்ளார்.
மேலும் மாலை 6.30 மணிக்குள் பிள்ளைகள் உறங்க வேண்டும். முன்னதாக உணவை தயார் செய்து கொடுத்து அவர்களை உறங்க செய்து விடுவேன். மூன்றாம் ஆண்டில் படிக்கும் மகன் அதனை கேட்காது சுட்டித்தனம் செய்வதால், பொலிஸாரை அழைத்து பயமுறுத்த தொலைபேசி அழைப்பை எடுத்தேன் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெண்ணை கடுமையாக எச்சரித்த பொலிஸார், இப்படியான சிறிய சம்பவங்களுக்காக பொலிஸாரின் நேரத்தையும் பொது மக்களின் பணத்தை விரயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
