தாய் ஒருவரின் மோசமான செயல்! - ஏழு வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்
ஏழு வயதான சிறுவனை கடுமையாக தாக்கிய தாய் மற்றும் பாட்டியை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுவனை தாக்கும் காணொளி ஒன்று வெளியாகிய நிலையில், அது குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இன்று பிற்பகல் தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டனர்.
ஏழு வயதான சிறுவனை கொடூரமான முறையில் தாக்கும் தாய் ஒருவர் தொடர்பான காணொளி வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் கணேகொட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் தனது ஏழு வயதான சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதன்போது குறித்த சிறுவன் “தனக்கு பசி பசி” என கதறிய போதிலும் தாய் கடுமையாக தாக்கியுள்ளார்.
குறித்த சிறுவனை தாக்கும் காட்சியை தாக்குதலுக்கு இலக்கான சிறுவனின் சகோதரி பதிவு செய்து, பிரதேசவாசி ஒருவரின் உதவியுடன் ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, தாக்குதலை மேற்கொண்ட தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பல்லேவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.