கீரை பறிக்க சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக பலி!
சீரற்ற வானிலையின் போது கீரை பறிக்க சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கட்டான, ஹல்பே, அம்பலயாய பிரதேசத்தில் தாய் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் நேற்று கன மழை பெய்துக் கொண்டிருந்த போது கீரை பறிப்பதற்காக மா ஓயாவிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 41 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 வயது பெண் குழந்தை மற்றும் உறவினர் ஒருவருடைய 8 வயதுடைய ஆண் குழந்தை ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கைவிடப்பட்டிருந்த களிமண் குழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சடலங்கள் நீர்க்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
